போதைப்பொருள் விற்பனை... சர்வதேச கும்பலுக்கு தொடர்பு

0 2748
போதைப்பொருள் விற்பனை... சர்வதேச கும்பலுக்கு தொடர்பு

சென்னையில் பிடிபட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலுக்கு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சேப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணிபுரியும் அனீஸ் என்பவரிடம் இருந்து, போதை பொருட்களை வாங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அனிஷை கைது செய்து விடுதியில் சோதனை நடத்தியதில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கின. மேலும், விடுதியின் உரிமையாளர் தமீம்அன்சாரி என்பவர் இதில் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக, மேற்கொண்ட விசாரணையில், மும்பையில் இருந்து பெங்களூர் வழியாக சென்னைக்கு போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் தமீம் அன்சாரி உட்பட 3 பேர், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட விவகாரம் கண்டறியப்பட்டது.

சூளைமேட்டில் உள்ள குடோனில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சூடோபெரின் என்ற போதை மருந்தையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்மூலம் மயிலாப்பூரில் இப்படிப்பட்ட போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பலுக்கு, மும்பை பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்து பார்சல் மூலம் போதைப் பொருளை தமீம் அன்சாரி கொண்டு வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த போதைபொருள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து பார்சல் மூலம் கடத்தி வரப்பட்டது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியில் இருப்பதாகக் கூறப்படும் தமீம் அன்சாரியை கைது செய்தால் தான், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க முடியும் என்ற அடிப்படையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments