சுய பாதுகாப்பு... உயிர் காக்கும்

0 1613
சுய பாதுகாப்பு... உயிர் காக்கும்

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பேருந்து சேவை தொடரப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சுயபாதுகாப்பாக இல்லாவிட்டால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இயல்புநிலை திரும்பும் வகையில், பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்துள்ளது. ஆயினும், தங்கள் வாழ்வை காத்துக்கொள்வது அவரவர் கையில் தான் என்கின்றனர் மருத்துவர்கள்.

பொதுமக்களின் வாழ்வாதாரம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினாலும், மக்கள் சுயபாதுகாப்புடன் இல்லாவிட்டால், கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தனக்கு ஒன்றும் நேராது என வெளியில் சுற்ற வேண்டாம் எனவும், கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பில்லாமல் இருக்கும் அனைவருக்கும் வரக்கூடியது என்றும் அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

வரவிருக்கும் நாட்களில் பேருந்துகளில் மக்கள் அதிகளவில் பயணிக்கும் சூழலில், சுயபாதுகாப்பை மீறினால் கொரோனா வைரஸ் தொற்று நிச்சயம் அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே சில இடங்களில் தனிநபர் இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்டிருப்பது, கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் ஏதுமின்றி இருப்பதையே காட்டுகிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் பாதிப்பை உணர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments