6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நாய்

0 1520
கொரோனா பெருந்தொற்றால் ஏறத்தாழ 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் டெல்லி மெட்ரோ ரயிலில், முதல் முறையாக பாதுகாப்பு பணியில் ஒரு பெல்ஜியன் மலினோ இன நாய் ஈடுபடுத்தப்பட உள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் ஏறத்தாழ 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் டெல்லி மெட்ரோ ரயிலில், முதல் முறையாக பாதுகாப்பு பணியில் ஒரு பெல்ஜியன் மலினோ  இன நாய் ஈடுபடுத்தப்பட உள்ளது.

போலோ என பெயரிடப்பட்டுள்ள இந்த நாய், ஜெர்மன் shepherd-ஐ விட ஆக்ரோஷமாக செயல்படுவதுடன், அபாரமான மோப்ப சக்தியும், தாக்கும் திறனும் உள்ளதால், முக்கியமான ரயில் நிறுத்தத்தில் இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த இன நாய்கள், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்க படைகளுக்கு அடையாளங்காட்டியதில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments