மணப்புரம் கோல்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் முககவசம் அணிந்தபடி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளை..!

0 3003
ஆந்திராவில் மணப்புரம் கோல்ட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முக கவசம் அணிந்து வந்த 2 இளைஞர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளர்.

ஆந்திராவில் மணப்புரம் கோல்ட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முக கவசம் அணிந்து வந்த 2 இளைஞர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

அனந்தபுரம் மாவட்டம் ராயதுர்கத்தில் உள்ள மணப்புரம் கோல்டு ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர், கையில் இருந்த துப்பாக்கியை காண்பித்து ஊழியர்களிடம் 51 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தனர். 

அதன்பின் ஆசிட் பாட்டிலை எடுத்து அருகிலிருந்த ஊழியர்களின் மேல் வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்த சென்ற போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம் பெல்லாரி நோக்கி சென்றதாக கூறப்படுவதால், இரு மாநில எல்லையில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments