எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

0 9248
எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருவேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தை கள்ளக்குறிச்சி நகரில் எல்.முருகன் திறந்துவைத்தார். முன்னதாக மாடூர் சுங்கச் சாவடி அருகே 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்திலும் தனிநபர் இடைவெளியின்றி அவர்கள் குவிந்தனர். இதனையடுத்து ஊரடங்கை மீறுதல், பொதுசுகாதாரத்துக்கு கேடு விளைவித்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் எல்.முருகன் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திலும் தியாகதுருகம் காவல் நிலையத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments