தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 3866
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக்கனமழையும் பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments