அதிபர் தேர்தலுக்கு முன் இந்தியா-அமெரிக்கா மினி வர்த்தக ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு

0 1588
அதிபர் தேர்தலுக்கு முன் இந்தியா-அமெரிக்கா மினி வர்த்தக ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு

நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்னர், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு மினி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஸ்டீபன் பேகன் (Stephen Biegun) தெரிவித்திருக்கிறார். 

US India Strategic and Partnership Forum ஏற்பாடு செய்த காணொலி மாநாட்டில் அவர் இதைத் தெரிவித்தார். அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே மிகவும் உறுதியான நட்பும், வர்த்தக உறவுகளை பேச வேண்டும் என்ற தீவிர எண்ணமும் இருப்பதால் , இப்படி ஒரு மினி வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படலாம் என அவர் கூறினார். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது. 2018-19 ல் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக இருந்த வர்த்தகம், கடந்த நிதியாண்டில் 6 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments