இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ் அப்பின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த - ராகுல் காந்தி வலியுறுத்தல்

0 639
இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ் அப்பின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த - ராகுல் காந்தி வலியுறுத்தல்

இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ் அப்பின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றை பாஜக கட்டுப்படுத்துவதாக டைம்ஸ் மேகஜின் (Times Magazine) செய்தி வெளியிட்டதாக காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் ராகுல் வெளியிட்ட பதிவில், இந்திய ஜனநாயகத்தின் மீதும், சமூக நல்லிணக்கம் மீதும் பேஸ்புக்கும், வாட்ஸ் அப்பும் தாக்குதல் தொடுத்திருப்பதை சர்வதேச ஊடகம் அம்பலபடுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வெளிநாட்டு நிறுவனத்தை யாரும் அனுமதிக்கக் கூடாது என்றும், இதுகுறித்து விசாரித்து, தவறு செய்திருந்தால் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments