நடப்பாண்டில் 7.5 கோடி 5ஜி ஐபோன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

0 885
நடப்பாண்டில் 7.5 கோடி 5ஜி ஐபோன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

நடப்பாண்டின் பிற்பகுதியில் குறைத்தது 7 கோடியே 50 லட்சம் 5ஜி ஐபோன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்தாம் தலைமுறை வயர்லெஸ் வேகம், வேறுபட்ட வடிவமைப்பு, பரந்த திரை அளவுகளுடன் 4 புதிய ஐபோன் மாடல்களை அக்டோபர் மாதம் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் வீட்டில் இருந்தே பணி புரிவோர் மற்றும் கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புக்கான தேவை உயர்ந்துள்ளதாகவும் இதன் விளைவாக 5 ஆம் தலைமுறை ஐபோன்களின் ஏற்றுமதி இந்த ஆண்டில் 8 கோடி யூனிட்டுகளை எட்டக்கூடும் என்றும் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments