2 ஆண்டு வரை மொரடோரியம்-மத்திய அரசு தகவல்

0 8490
கடன் தவணை செலுத்த 2வருடங்கள் கூட அவகாசம் கொடுக்கலாம் - மத்திய அரசு

கொரோனாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கடன் தவணை நீட்டிப்பு காலத்தை, மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க இயலும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வட்டி, வட்டி மீதான வட்டி ஆகியவற்றை தள்ளுபடி செய்வது குறித்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அது தொடர்பாக மத்திய அரசின் பதில் மனுவை   சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அப்போது, கடன் தவணை நீட்டிப்பு காலத்தை, மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க இயலும் என அவர் கூறினார். 

கொரோனாவால் எந்தெந்த துறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் இந்த கால அவகாசத்தை வழங்குவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது பற்றி பரிசீலிக்குமாறு ஏற்கனவே ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வட்டி மீது விதிக்கப்படும் வட்டியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்த வழக்கில் வட்டி தள்ளுபடி, வட்டிக்கு மேல் வட்டி ஆகியன குறித்து நாளை தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கடன்தவணை கால நீட்டிப்பு காலமான 6 மாதம் நேற்றுடன் முடிந்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments