பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி..!

0 2730
நேற்று காலமான முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலமான முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.  

பிரணாப்பின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மருத்துவமனையில இருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி ராஜாஜி மார்க்கில் பிரணாப் வசித்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரணாப்பின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பிரணாப்பின் உடல் பீரங்கி வண்டிக்குப் பதிலாக மூடப்பட்ட வேனில் எடுத்துச் செல்லப்பட்டு டெல்லி லோடி ரோடு மயானத்தில் இன்று பிற்பகல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments