''அபுதாபியில் இஸ்ரேல் விமானம் தரையிறங்கியதை காண வேதனையாக இருந்தது !''- பாலஸ்தீன பிரதமர்

0 9659

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி இஸ்ரேல் நாட்டுக்கு அப்படியே பொருந்தும். உலக வரைபடத்தில் சிறு புள்ளியளவே உள்ள இந்த நாடு உலகத்தையே உருட்டி மிரட்டி வருகிறது. உலக வல்லரசான அமெரிக்காவுக்கு இஸ்ரேல் செல்லப்பிள்ளை. அதனால், சுற்றியுள்ள அரபு நாடுகளிடத்தில் தனி ஒருவனாக இஸ்ரேல் மல்லுக்கட்டி வந்தது. ஆனால், சமீப காலமாக அரபு நாடுகளின்  நட்பை இஸ்ரேல் நாடத் தொடங்கியுள்ளது மத்திய தரைக்கடல் பகுதியில் நிரந்தர அமைதி நிலவ வழி வகுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே இஸ்ரேல் நாட்டுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையில் சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் நாட்டை தனி நாடாக அங்கீகரித்த முதல் வளைகுடா நாடு அமீரகம் என்பது முக்கியமானது. இதற்கு முன்னதாக எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. அரபு நாடுகளில் ஈரான் , கத்தார் போன்ற நாடுகளில் ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த நாடுகள்.

ஈரான் நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள பகை உலகம் அறிந்ததே. சவுதி அரேபியா, அமீரகம், குவைத் போன்ற நாடுகளில் சன்னி முஸ்லிம்கள் கட்டுப்பாட்டிலுள்ளன. தற்போது, சன்னி முஸ்லிம்கள் நிறைந்த நாடானா அமீரகம் இஸ்ரேல் நாட்டை தனி நாடாக அங்கீகரித்திருப்பது அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் ஈரானை தனிமைப்படுத்தும் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.image

இந்த நிலையில், அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்தும் வகையில், முக்கிய பிரநிதிகளின் கூட்டம் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசரும் இவங்கா டிரம்பின் கணவருமான ஜேர்ட் குஷ்னர் ஜெருசலேம் வந்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டவர்களை சந்தித்த பிறகு, ஜெருசலேத்தின் புனித இடமாக கருதப்படும் மேற்கு சுவரில் வழிபாடு நடத்தினார். 

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் தனி விமானத்தில் ஜேர்ட் குஷ்னர் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் அபுதாபிக்கு சென்றடைந்தார். இஸ்ரேல் நாட்டின் எல் அல் விமானத்தில் சவுதி அரேபியா வான் வழியாக பறந்து அபுதாபியை அவர்கள் சென்றடைந்தனர். இஸ்ரேல் நாடு  கேட்டுக் கொண்டதையடுத்து தங்கள் வான் வழியை பயன்படுத்திக் கொள்ள சவுதி அரேபியா சிறப்பு அனுமதியளித்தது. இஸ்ரேல் நாட்டு விமானத்துக்கு தங்கள் வான்வெளியை பயன்படுத்த சவுதி அனுமதியளித்ததும் இதுவே முதன்முறை.

விமானத்தில் சமாதானம் என்று ஆங்கிலம், ஹீப்ரு மற்றும் அரேபிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது., அபுதாபி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கிய போது அமெரிக்கா, இஸ்ரேல், அமீரக நாட்டின் கொடிகள் முகப்பிவ் பறக்க விடப்பட்டிருந்தன. விமானத்தில் வந்த பிரநிதிகளுக்கும் அமீரகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இஸ்ரேல் பிரதிநிதிகள் அமீ‘ரகம் வந்தடைந்ததற்கு பாலஸ்தீன பிரதமர் கடும் முகமது  ஷ்யாதேக் கண்டனம் தெரிவித்தார்.  ''அபுதாபியில் இஸ்ரேல் விமானம் தரையிறங்கியதை காண மிக வேதனையாக இருந்தது. சுதந்திரம் பெற்ற ஜெருசலேத்தில் எமிரேட்ஸ் விமானம் தரையிறங்குவதை பார்க்கவே நாங்கள் காத்திருந்தோம். ஆனால், காட்சிகள் மாறி விட்டது.  இப்போது நாங்கள் ஒரு கடினமான காலக்கட்டத்தில் வாழ்கிறோம் '' என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments