குஜராத்தில் கனமழையால் நர்மதை ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம்... தெருக்களில் படகுகளில் சென்றுவரும் நிலை

0 1566
குஜராத்தில் கனமழையால் நர்மதை ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம்... தெருக்களில் படகுகளில் சென்றுவரும் நிலை

குஜராத்தில் நர்மதை ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம் பரூச் நகருக்குள் புகுந்துள்ளதால் அங்குள்ள தெருக்களில் வெனிஸ் நகரைப் போல் படகுகளில் சென்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் கனமழை பெய்து வருவதால் நர்மதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சர்தார் சரோவர் அணையில் இருந்து நொடிக்கு 10 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பரூச் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

அங்குள்ள வீடுகள் கட்டடங்களில் முதல் தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் முதல் தளத்துக்குச் சென்று பாதுகாப்பாகத் தங்கியுள்ளனர். இந்நிலையில் வெனிஸ் நகரைப் போல் பரூச் நகரத் தெருக்களிலும் மக்கள் படகில் சென்று வருகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments