கால்வன் மோதலில் உயிரிழந்த சீன வீரர்களின் கல்லறைப் படங்கள் வெளியானது

0 3333
கால்வன் மோதலில் உயிரிழந்த சீன வீரர்களின் கல்லறைப் படங்கள் வெளியானது

கால்வன் மோதலில் சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததற்குச் சான்றாக அவர்களின் கல்லறைப் படங்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் நாள் இந்திய - சீன படையினரிடையே ஏற்பட்ட கைகலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோர், காயமடைந்தோர் விவரங்களை இந்தியா வெளிப்படையாகத் தெரிவித்த நிலையில், சீனா தனது பக்கத்தில் ஏற்பட்ட சேத விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் 35க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கால்வன் மோதலில் உயிரிழந்த சீன வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட 35 கல்லறைகளின் படங்கள் வெளியாகியுள்ளது. இது ஏற்கெனவே இந்தியா தெரிவித்ததற்குச் சான்றாக அமைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments