ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குதித்த மாணவர் மின்சாரம் தாக்கி பலி

0 1179
ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குதித்த மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குதித்த மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜம்மலமடுகு மண்டலம் பி.பொம்மெப்பள்ளியை சேர்ந்த அங்காளம்ம-குர்ரப்பா தம்பதியினரின் மகனான குருபிரசாத் கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.

கிணற்றில் குதித்து நீந்தும்போது வீடியோ எடுக்கும் படி தனது உறவினரான சிறுவனிடம் கூறிவிட்டு கிணற்றில் குதித்துள்ளார்.

சிறிது நேரம் நீந்திய நிலையில், அங்கிருந்த தண்ணீர் செல்லும் இரும்புக் குழாயை பிடித்த குருபிரசாத் மின்சாரம் தாக்கி கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments