ஏற்றுமதிக்கான அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடம் - முதலமைச்சர்

0 691
ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாமிடம் பிடித்துள்ளது.

ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாமிடம் பிடித்துள்ளது.

ட்விட்டரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடு ஆகிய 4 அம்சங்களை கருத்தில் கொண்டு  2020ம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டை நிதி ஆயோக் (Niti Aayog's) Export Preparedness Index 2020 ) வெளியிட்டிருப்பதாகவும், அதில்  குஜராத் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3ஆவது இடத்திலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தேசிய அளவில் ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் 46 சதவீதமும், எலெக்ட்ரானிக் மற்றும் ஆடை ஏற்றுமதியில் 19 சதவீத பங்கையும் தமிழகம் கொண்டிருப்பதாகவும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments