தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு

0 1937
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வதாக அறவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் ஒமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வைகுந்தம் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில், சமயபுரம், பொன்னம்பலப்பட்டி, திருப்பராய்த்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனை தவிர புதூர் பாண்டியபுரம், எலியார்பதி, கொடைரோடு, வேலஞ்செட்டியூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வாகனங்களின் தரத்திற்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments