தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகை

0 1132
பாரம்பரியமான ஓணம் பண்டிகை தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பாரம்பரியமான ஓணம் பண்டிகை தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மலையாள மொழி பேசும் மக்களால் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, தமிழகத்திலும் கேரள எல்லையோர மாவட்டங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு கொரோனா தாக்கத்தால் எளிமையான முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவையில் ஓணம் பண்டிகையை ஒட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, தனிநபர் இடைவெளியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். அதனை பின்பற்றி பொதுமக்கள் வீடுகளிலேயே அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் அத்தப்பூ கோலங்கள் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல கோவையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மலையாளிகள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வீடுகளிலேயே அத்தப்பூ கோலமிட்டு எளிமையான முறையில் கொண்டாடினர். நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள ஓணம் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. கோயில்களிலும் வீடுகளிலும் மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் அத்த பூ கோலம் போடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள மலையாள மொழி பேசும் கேரளா மக்கள், வீடுகளின் மொட்டை மாடிகளில் அத்தப்பூ கோலமிட்டும், திருவாதிரைக்களி நடனம் மற்றும் படுக நடனம் ஆடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். 

நாளை முதல் பேருந்து சேவை துவங்குவதால், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய வளாகத்தை நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். பேருந்து நிறுத்தும் பகுதிகள், போக்குவரத்து கழக அலுவலகம், புறக்காவல் நிலையம், கழிப்பறைகள், பயணிகள் காத்திருப்பு அறை, வணிக கடைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி  தெளிக்கப்பட்டது. நாளை முதல் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும் என நகராட்சி சுகாதார துறை தெரிவித்துள்ளது.

சேலம் அஸ்தம்பட்டி கோரிமேடு பகுதிகளில் வசித்து வரும் மலையாள மக்கள், முக்கக்கவசம் அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்ட பெண்கள், பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர். 

புதுச்சேரியில் வசித்து வரும் மலையாள மொழி பேசும் மக்கள், கொரோனா அச்சத்தால் வீடுகளிலேயே அத்தப்பூ கோலமிட்டும், அறுசுவை உணவு சமைத்தும் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

கொரோனா தொற்று காரணமாக தருமபுரியில் மலையாள மொழி பேசும் மக்கள் வீடுகளிலேயே, முகக்கவசம் அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

ஈரோட்டில் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், அதில் விளக்கேற்றி வைத்தும் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மலையாள மக்கள், கேரள பாரம்பரிய உடை அணிந்தும், பலவகை காய்கறிகளுடன் சமையல் செய்து மாவேலி மன்னனுக்கு படையலிட்டும் மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments