கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் ஆந்திரம்..!

0 1199
ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 24ஆயிரமாக அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிரத்துக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 24ஆயிரமாக அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிரத்துக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்து நாட்களாக நாள்தோறும் பத்தாயிரத்துக்கு மேல் உள்ளது. இதையடுத்து அங்குக் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 767 ஆக அதிகரித்து அதிகம்பேர் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளது.

7 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரம் முதலிடத்திலும், 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments