கடன் தவணைத் தொகை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1857
கடன் தவணைத் தொகை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வங்கிகளில் கடனுக்கான தவணைத் தொகையை திருப்பி செலுத்த ஏற்கனவே ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா கால ஊரடங்கையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய 'ரொக்கப் பணம்' அல்லது 'வருமானம்' என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதை உள்மனதில் வாங்கிக் கொண்டு, வட்டித் தொகை,  அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட முன்வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments