வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்..!

0 5868
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 28ஆம் தேதி இறந்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 28ஆம் தேதி இறந்தார்.

அவரது உடல் சொந்த ஊரான அகத்தீசுவரத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாக்கூர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, குமரி மாவட்டச் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று மாலை, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப் பின் வசந்தகுமாரின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அவரது தோட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தோட்டத்தில் சமுதாய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்த பின் வசந்தகுமாரின் உடல் அவரது பெற்றோரின் கல்லறைகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாகக் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இருவர் தலைமையில் காவலர்கள் 450 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments