தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

0 3346
தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

கோவை மாநகராட்சி ஆணையர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுளளது.

இதுதொடர்பான அறிக்கையில், கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் ஜடாவத் வேளாண்துறை துணை செயலாளராக மாற்றப்பட்டு, அவரது இடத்திற்கு சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவும், அவரது இடத்திற்கு பழனி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயசந்திரபானு ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments