தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் தளர்வற்ற முழு ஊரடங்கு

0 7438
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும், இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும், இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், விதிமுறை மீறி சுற்றித்திரிபவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments