தமிழக பா.ஜ.க துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம்

0 5604
தமிழக பா.ஜ.க துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழக பா.ஜ.க-வின் துணைத்தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, கடந்த மே மாதம் தனது பணியைத் துறந்தார். பொதுவாழ்வில் ஈடுபடுவதாகத் தெரிவித்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சியில் பணியாற்ற உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments