வேலைக்கு வர மறுத்த இளைஞரை தாக்கி மொட்டை... பிக்பாஸ் -2 புகழ் பிரபலத்தின் மனைவி கைது

0 4485
வேலைக்கு வர மறுத்த இளைஞரை தாக்கி மொட்டை... பிக்பாஸ் -2 புகழ் பிரபலத்தின் மனைவி கைது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வீட்டு வேலைக்கு வர மறுத்த தலித் இளைஞரை மிரட்டி மொட்டையடித்த பிக்பாஸ் போட்டியாளரின் மனைவி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த தலித் இளைஞரான ஸ்ரீகாந்த், தெலுங்கு பிக்பாஸ் 2 புகழ் நூதன் நாயுடு என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

ஒரு மாதம் வீட்டு வேலை செய்த ஸ்ரீகாந்த் சம்பளம் வாங்கிக்கொண்டு அடுத்த மாதம் வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து நூதன்நாயுடுவின் மனைவி மதுப்பிரியா என்பவர், ஸ்ரீகாந்தை வீட்டுக்கு வரவழைத்து மற்ற வேலையாட்கள் மூலம் அவரை அடித்துத் துன்புறுத்தி மிரட்டி, சலூன்கடைக்காரர் மூலம் மொட்டை போடச் செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுப்ரியா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments