பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் பணியிடங்களுக்குத் திரும்ப பிரிட்டன் அரசு வேண்டுகோள்

0 854
பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் பணியிடங்களுக்குத் திரும்ப பிரிட்டன் அரசு வேண்டுகோள்

கொரோனா சூழலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் அலுவலகங்களுக்கும் பணியிடங்களுக்கும் திரும்ப வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஊரடங்கால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப வேண்டும் எனக் கடந்த மாதமே பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்தார்.

இருப்பினும் ஆகஸ்டு முதல் வாரம் வரை பிரிட்டன் நகரங்களில் 17 விழுக்காட்டினர் மட்டுமே பணியிடங்களுக்குத் திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மக்கள் பணியிடங்களுக்குத் திரும்ப வேண்டும் என பிரிட்டன் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் சாப்சும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments