கூட்டணிக்கு அதிமுக தலைமை... முதல்வர் திட்டவட்டம்

0 2067
சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அந்த வகையில், மாலையில் தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எந்த தேர்தலாக இருந்தாலும், அதிமுக தலைமையில் தான் கூட்டணி என உறுதிபட அறிவித்தார்.

வீடு தேடி வந்து ஏழை மக்களை மிரட்டும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட, தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக பணம் வசூலித்தால், நடவடிக்கை பாயும் என்றார்.

முன்னதாக, காலையில், திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி, மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

காவிரி பிரச்சினையில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு தரப்பட வேண்டிய தண்ணீரை காவிரி மேலாண்மை வாரியம் மூலம் கேட்டுப்பெற நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments