தாம்பரம் அருகே பட்டப்பகலில் கடத்தப்பட்ட 15 வயது சிறுவன்.. சில மணி நேரத்திலேயே மீட்ட போலீசார்..!

0 28166

சென்னை தாம்பரம் அருகே 5 லட்ச ரூபாய் கேட்டு உணவக உரிமையாளர் மகன் கடத்தப்பட்ட சம்பவத்தில், அந்த உணவகத்தில் பணிபுரிந்து வேலையை விட்டு நீக்கப்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். காதல் விவகாரத்தில் இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உணவகம் நடத்தி வரும் தங்கராஜ் என்பவரின் 15 வயது மகனை 3 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று, 5 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியது.  கடத்தல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மறைமலை நகர் அருகே காரை மடக்கிய போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஹரிஹரன், விக்னேஷ், சரத்குமார் என 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஹரிஹரன் என்பவன் தங்கராஜின் உணவகத்தில் பணிபுரிந்து வந்தவன் என்பதும் அண்மையில் அவன் வேலையை விட்டு நீக்கப்பட்டவன் என்பதும் தெரியவந்தது.

தங்கராஜின் உறவினர் பெண் ஒருவரை ஹரிஹரன் காதலித்ததாகவும் அது தெரியவந்து அவன் வேலையைவிட்டு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில் தங்கராஜை பழிவாங்க நினைத்த ஹரிஹரன், சிறுவனை கடத்தி 5 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக சிறுவனுடனான பழக்க தோஷத்தில், அவனுக்கு மதிய உணவும் வாங்கிக் கொடுத்திருக்கிறான் ஹரிஹரன் என்று கூறும் போலீசார், தொடர்ந்து அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments