இந்தியாவிற்கு போர் விமான விற்பனை ஒப்பந்தம்: ரஷ்யா நம்பிக்கை

0 9612

இந்தியாவுக்கு 33 போர் விமானங்கள், 5 கேஏ 31 (ka-31) ஹெலிகாப்டர்களை விற்பது தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த ஆண்டுக்குள் இறுதியாகிவிடும் என்று நம்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

7,418 கோடி ரூபாய்க்கு 59 மிக்-29 விமானங்களை மேம்படுத்தவும் மற்றும் 21 மிக்-29 போர் விமானங்களை வாங்கவும், 10,730 கோடி ரூபாய்க்கு 12 சுகோய் -30 எம்கேஐ (mki) விமானங்கள் வாங்கவும் கடந்த ஜூலை மாதம் இந்தியா ஒப்புதல் அளித்தது. எஸ்-400 வான்பாதுகாப்பு அமைப்பை வாங்குவது தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து கூறிய ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பின் (Federal service for military technical cooperation) மூத்த அதிகாரி மரியா வோரோபயேவா (maria vorobyeva), எஸ்400 அமைப்புகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பணி 2021 இறுதிக்குள் தொடங்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments