அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதை ஏற்பதாக டிரம்ப் அறிவிப்பு

0 1521
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதை ஏற்பதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளராக நியமிக்கப்பட்டதை டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார்.

நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபரான டிரம்ப் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டனில் குடியரசு கட்சி மாநாட்டில் மகள் இவாங்காவுடன் கலந்து கொண்ட டிரம்ப், அந்த நியமனத்தை ஏற்பதாக அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானதும், வரலாற்றில் சிறந்த பொருளாதார கட்டமைப்பை கொண்ட நாடாக அமெரிக்காவை உருவாக்க போவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments