ஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள்... மக்களே உஷார்...
ஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள்
ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள் இயங்குவதாகவும், வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் , தற்போது வரை ஜியோ மார்ட் தரப்பில் விநியோகஸ்தர் அல்லது மாதிரி உரிமையாளர் உரிமம் போன்றவை யாருக்கும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரிமங்கள் வழங்கப்படும் எனக் கூறி, வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த தொகையும் வசூலிப்பதில்லை எனவும் ரிலையன்ஸ் குறிப்பிடப்படுள்ளது.
Comments