பேஸ்புக் விளம்பரம் - பாஜக முதலிடம்

0 3682
பேஸ்புக்கில் அதிக செலவில் அரசியல் விளம்பரம் செய்த இந்திய கட்சிகளில், மத்தியில் ஆளும் பாஜக முதலிடத்தில் உள்ளது.

பேஸ்புக்கில் அதிக செலவில் அரசியல் விளம்பரம் செய்த இந்திய கட்சிகளில், மத்தியில் ஆளும் பாஜக முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடப்பு ஆகஸ்ட் வரையிலான ஒன்றரை ஆண்டுகளில் மொத்தம் 4 கோடியே 61 லட்சம் ரூபாயை பாஜக விளம்பரங்களுக்காக செலவழித்துள்ளது.

ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் செலவழித்துள்ள காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அதிகம் செலவு செய்ததில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற 4 விளம்பர தாரர்களும் பாஜகவுடன் தொடர்புடையவை தான்.

அதனையும் கணக்கில் சேர்த்தால் பாஜகவின் மொத்த செலவு 10 கோடியே 17 லட்சம் ரூபாயாக உயர்ந்து விடும். முதல் 10 இடங்களில் உள்ள ஆம் ஆத்மி கட்சி 69 லட்சம் ரூபாயை விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments