சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த ரூ.1.36 கோடி மதிப்பிலான கரன்சி பறிமுதல்

0 1202
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுங்க துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சிங்கப்பூருக்கு அனுப்பபட இருந்த 3 பார்சல்களை பரிசோதனை செய்த அதிகாரிகள், மடித்து வைக்கப்பட்ட சேலைகள் மற்றும் சட்டைகளுக்கு இடையே கவர்களில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதன் மொத்த மதிப்பு 1 கோடியே 36 லட்சம் ரூபாய் என தெரிவிக்கும் அதிகாரிகள், அந்த பார்சல்களை அனுப்பிய இருவரை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments