கொரோனா சோதனை முடிவுகளை வழங்க நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பு என்ன? - நீதிபதிகள்

0 1176
கொரோனா சோதனை முடிவுகளை வழங்க நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பு என்ன? - நீதிபதிகள்

கொரோனா சோதனை முடிவுகளை வழங்க என்ன கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வினவியுள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாரக் கால முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தக் கோரி ராஜகோபால் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதுடன், திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் காணொலியில் ஆஜராகினர்.

சோதனை முடிவுகள் வெளிவரத் தாமதம் ஆவதால், முடிவு தெரியாத கொரோனா நோயாளிகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments