லடாக் எல்லையில் மிகவும் கவலைக்குரிய சூழல்... என்ன நடக்கிறது... வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவலை

0 19406
லடாக் எல்லையில் மிகவும் கவலைக்குரிய சூழல்... என்ன நடக்கிறது... வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவலை

1962 ல் நடந்த சீன போருக்குப் பிறகு, லடாக் எல்லையில், மிகவும் கவலைக்குரிய சூழல் ஏற்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.

தனியார் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறிய அவர், குறிப்பிட்ட எல்லைப்பகுதியில், இந்திய-சீன படைகள் இதுவரை அல்லாத அளவுக்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டு அண்டை நாடுகளுக்குள் நல்ல உறவு இருப்பதற்கான அடிப்படை,  எல்லையில் அமைதியும், சமாதானவும் நிலவுவதே என சீனாவிடம் தெளிவாக இந்தியா தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறினார். கடந்த காலங்களில் ராஜீய பேச்சுவார்த்தைகள் வாயிலாக எல்லைப் பிரச்சனைகளுக்கு முடிவு காணப்பட்டன என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments