கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான பணிகள் தீவிரம்... துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு

0 2089
கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான பணிகள் தீவிரம்... துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு வேலைகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

கொரோனா பரவலால் கோயம்பேடு சந்தை கடந்த மே 5-ம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில், அதை  புதுப்பித்து மீண்டும் திறப்பதற்கான பணிகளை CMDA நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் 2 கோடி ரூபாய் செலவில் சாலைகள், நடைபாதைகள், மழைநீர் வடிகால்கள், கழிப்பறைகள்  புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், வாகன நிறுத்தம் போன்ற இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பணிகள் எப்போது நிறைவடையும் என்பதையும் CMDA உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயனிடம் கேட்டறிந்தார்.

வியாபாரிகள், வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான தேதி, வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments