ஜனநாயக கட்சி அதிபர் பதவியை கைப்பற்றினால், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத வகையில் நடவடிக்கை - கமலா ஹாரிஸ்

0 988
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத வகையில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் - கமலா ஹாரிஸ்

ஜனநாயக கட்சி அதிபர் பதவியை கைப்பற்றினால், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத வகையில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என துணை அதிபருக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நிதி திரட்டுதல் தொடர்பான காணொலி நிகழ்ச்சி ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், மத்திய கிழக்கில், இஸ்ரேல், ராணுவ பலம் மிகுந்ததாக திகழும் வகையில் அனைத்து உதவிகளும்  வழங்கப்படும் என கூறினார்.

ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்து விட்டதால், ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் ஈரானிடம் இருந்து இஸ்ரேலை எப்படி காப்பாற்றுவீர்கள் என கமலா ஹாரிசிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கு முன்னர் இருந்த ஒபாமா-ஜோ பிடன் காலத்தைப் போன்று, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்ரேலுக்கு ராணுவ-உளவுத்துறை உதவிகள் அளிக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments