உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் மற்றும் மு.க.ஸ்டாலின் இரங்கல்

0 743
உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் மற்றும் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், தனது கடின உழைப்பாலும், திறமையான வாதத்தாலும், நீதித்துறையில் தனி முத்திரை பதித்தவர் என குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு  தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பு என முதலமைச்சர் கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய சாதனையாளர் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைய வேண்டும் என்பதற்கு ஆதரவாக மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியவர் என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். தனது துணைவியார் மறைந்த 48 மணி நேரத்திற்குள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்திருப்பது, இதயத்தை நொறுங்கிப் போக வைக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments