ஜம்முவில் அமைகிறது திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில்!

0 20055
ஜம்முவில் ஏழுமலையான் கோவில்...

ம்மு காஷ்மீரில் திருப்பதி, ஏழுமலையான் கோயில் அமையவிருக்கிறது. ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஜம்மு - காஷ்மீர் அரசு ஒதுக்கித் தந்துள்ளது. இந்த நிலத்தை இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி.

நாட்டில் பல்வேறு இடங்களிலும் திருப்பதி, ஏழுமலையான் கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது, திருமலை திருப்பதி தேவஸ்தானம். வட இந்தியாவில் மும்பை, ரிஷிகேஷ், குருஷேத்திரம், புதுடெல்லி ஆகிய இடங்களில் ஏற்கெனவே ஏழுமலையான் கோயிலைக் கட்டியுள்ளது திருமலை தேவஸ்தானம். தற்போது ஹைதராபாத், அமராவதி, ஒடிஸா, ஜம்மு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கோயில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

image

இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் அரசு ஜம்முவில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்த நிலத்தை அம்மாநில அதிகாரிகளுடன்  இணைந்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி பார்வையிட்டுள்ளார்.

ஜம்மு அதிகாரிகளுடன் பேசிய சுப்பா ரெட்டி, “தேவஸ்தான பொறியாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு, நிலத்தைப் பரிசோதித்து, கோயில் கட்டுவதற்கான திட்ட வரையறையைத் தயார் செய்வார்கள்” என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது ஜம்மு கலெக்டர் திருமதி சுஷ்மா, மாவட்ட மேம்பாட்டு அதிகாரி ரமேஷ் சந்தர், கூடுதல் இணை இயக்குனர்  ஷாம் சிங், உதவி இயக்குனர் ராகேஷ் துபே உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments