ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0 477
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பர்வான் மாகாணம் வெள்ளப்பெருக்கால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.

300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் தமீம் அசிமி (Ahmad Tameem Azimi) தெரிவித்தார்.

தரை மற்றும் ஆகாய மார்க்கமாக மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக அஹ்மத் தெரிவித்துள்ளார். நூரிஸ்தான், கபீசா, பஞ்ச்ஷீர் உள்ளிட்ட மாகாணங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments