MD-160 என்ற ஆயுததாரி வாகனத்தை அருங்காட்சியமாக மாற்ற ரஷ்யா முடிவு

0 1730

ரஷ்யா தனது புகழ்பெற்ற MD-160 என்ற ஆயுததாரி வாகனத்தை அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

MD-160 லன் க்ளாஸ் எக்ரானோபிளேன் என்ற விமானமாகவும், கப்பலாகவும் இயங்கக்கூடிய கடல் வழி வாகனத்தை 1980 களில் ரஷ்யா பயன்படுத்தி வந்தது. போயிங் 747 விமானத்தை விட பெரியதான இந்த விமானம் தற்போதைய கடல் விமானம், ஹோவர்கிராப்ட்களுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

மேலும் கடல் மட்டத்தில் இருந்து 13 அடி உயரம் எழும்பி எதிரிகளின் கண்களில் சிக்காமல் ஏவுகணைகளை வீசுவதில் சிறந்து விளங்கிய இந்த வாகனம் அன்றைய ரஷ்யாவின் மிகப் பெரிய பலமாகக் கருதப்பட்டது.

1990களின் பிற்பகுதியில் இந்த வாகனத்திற்கு ரஷ்ய அரசு ஓய்வளித்தது. தற்போது இதனை அருங்காட்சியமாக மாற்ற அந்நாடு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து காஸ்பியன் கடலில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனத்தை அருங்காட்சியமாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments