சுஷாந்த் சிங் விவகாரம்-ரியா சக்ரபோர்த்தி மீது போதைப்பொருள் தொடர்பான வழக்கு பதிவு

0 1907
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி மற்றும் பிறர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை, போதை பொருள் ஒழிப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 3 பேர் கொண்ட குழு இந்த வழக்கை விசாரணை செய்யும். இந்த வழக்கில் ரியா மற்றும் சோவிக் தவிர்த்து, ஜெய சஹா, சுருதி மோடி மற்றும் புனேவை சேர்ந்த போதை பொருள் விற்பனையாளரான கவுரவ் ஆர்யா என்பவரையும் விசாரணைக்குள் கொண்டு வரவுள்ளனர்.

ரியாவின் மொபைல் போனில் இருந்து ஜெய சஹாவுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில் இருந்து, எம்.டி.எம்.ஏ., மரிஜுவானா மற்றும் பிற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ரியா பயன்படுத்தியது தெளிவானது. இதையடுத்து நடிகை ரியாவை விசாரணைக்கு சம்மன் அனுப்ப போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments