ராணுவ தளவாடங்களில் சுயசார்பு பெற மத்திய அரசு நடவடிக்கை

0 782

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டிய, ராணுவ தளவாடங்களின் 2வது பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறக்குமதியை குறைத்து ராணுவ தளவாடங்களில் சுயசார்பு பெறும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 9ம் தேதி 101 வகையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முப்படையினர் இணைந்து அடுத்தகட்டமாக தடை விதிக்கப்பட வேண்டிய ஆயுதங்கள் மற்றும் தளாவாடங்கள் தொடர்பான பட்டியல் தயாரித்து வருவதாகவும், ஆண்டு இறுதியில் இந்த பட்டியல் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உலக தரத்திலான ஆயுதங்களை வழங்கக் கூடிய இந்திய நிறுவனங்களின் பட்டியலும் தயாராவதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments