சீனாவுக்கு எதிராகவும், தைவானுக்கு ஆதரவாகவும் களமிறங்கிய அமெரிக்கா

0 6343

தைவான் பிரச்னை தொடர்பாக அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தைவானை தனது அங்கம் என சீனா கூறிவரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியை ஒட்டி சீன போர் விமானங்கள் சென்றதற்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தைவானுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலுடன் தென்சீனக் கடலில் போர்ப் பயிற்சியை மேற்கொண்டது.

இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறையும் முன்னரே கடந்த 3 வாரங்களில் சீனா தனது கடற்பரப்பில் நான்கு தனித்தனியான பயிற்சிகளை அறிவித்துள்ளது. இதனால் மூன்று கடல்களிலும் ஒரே நேரத்தில் பயிற்சிகளை நடத்துவதன் மூலம், ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலிருந்து வரும் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கான திறனை சீனா சோதித்து வருவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தென்சீனக் கடல் பகுதியில் தைவானை முன்னிறுத்தி அமெரிக்க, சீன மோதல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments