சென்னையில் தொழிலதிபரைக் கடத்தி 5 கோடி ரூபாய் பணம் பறிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

0 952

சென்னை முத்தியால்பேட்டையில் தொழிலதிபரைக் கடத்தி 5 கோடி ரூபாய் பணம் பறிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மண்ணடியைச் சேர்ந்தவர் திவான் அக்பர் என்பவர் ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி 2 கோடி கேட்டு திவான் அக்பரை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றுள்ளனர்.

5 கோடி ரூபாய் பணம் பறித்துக் கொண்டு திருவான்மியூர் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அக்பர் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சென்ற முத்தியால்பேட்டை போலீசார் அக்பரிடம் விசாரணை மேற்கொண்டபோது, நடந்த சம்பவங்களை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.  இதுதொடர்பாக, தவ்பீக் என்பவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 7 பேரைத் தேடி வருகின்றனர். 2 கோடி ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments