T20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ

0 1504

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் த்வெயின் பிராவோ டீ-ட்வெண்டி போட்டிகளில், 500 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல், கரீபியன் பிரிமீயர் லீக் மற்றும் பிக்பாஷ் (big bash) போன்ற உள்ளூர் தொடர்களிலும் பிராவோ விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் தொடரில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பிராவோ, செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 500வது விக்கெட்டை எடுத்துள்ளார்.

தனது 459வது டீ-ட்வெண்டி போட்டியில் பிராவோ இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் லசித் மலிங்கா, 390 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments