கடலூர், நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

0 1341
கடலூர், நாகை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

கடலூர், நாகை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

கொரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர், 32 கோடி ரூபாய் மதிப்பிலான 22 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற 33 திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின் நாகப்பட்டினம் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிற்பகலில் மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments