ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு தடை..? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

0 1353

ஆன் லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் வினோத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் இளம் வயதினர், மன ரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலையும் செய்து கொள்வதால் தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, நாகலாந்து போன்ற மாநிலங்கள் ஆன்– லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, ஏற்கனவே ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு தடை கோரிய வழக்குடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments