தலைமை செயலகத்தில் தீ - நீடிக்கும் மர்மம்

0 1831
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமை செயலகத்தில் நேற்று ஏற்பட்டதாக கூறப்படும் தீவிபத்தில் மர்மம் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமை செயலகத்தில் நேற்று ஏற்பட்டதாக கூறப்படும் தீவிபத்தில் மர்மம் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தங்க கடத்தல் வழக்கில் பினராயி விஜயனை காப்பாற்றவே திட்டமிட்டு தீ விபத்து நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு அம்மாநில எதிர்கட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார். 

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமை செயலக வளாகத்தில், முதல்வரின் அறைக்கு பின்பகுதியில் உள்ள வடக்கு சான்ட்விச் பிளாக் எனப்படும் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில், ஜெனரல் டிபார்ட்மென்ட் எனப்படும் பொதுப் பிரிவில் தீ பிடித்தது.

தங்க கடத்தல் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்கவே தீ வைக்கப்பட்டது என பாஜக, காங்கிரஸ் கட்சிகள் குற்றஞ்சாட்டி திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்தினர். போலீசார் தண்ணீர் பீரங்கிகளை பாய்ச்சியும், தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.

தீ விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். அதை அடுத்து இன்று காலை 7 மணிக்கு கூடுதல் டிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தலைமையில் வந்த போலீசார், முதற்கட்ட ஆய்வு நடத்தினர்.

மின்விசிறி இணைப்பு ஒன்றில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என தெரிவித்த போலீசார், தடயவியல் ஆய்வுக்குப் பிறகே அது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கருக்கு தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு உள்ளதால், அது குறித்த ஆவணங்களை அழிக்கவே தீ வைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.

தலைமைச் செயலர் விஸ்வாஸ் மேத்தா மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரையும், முதலமைச்சர் பினராயி விஜயனையும், நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க வேண்டும் எனவும் அவர் ஆளுநர் ஆரிப் முகம்மது கானை வலியுறுத்தி உள்ளார்.

சென்டிரல் ஏசி வசதி உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் மின்விசிறியின் தேவை என்ன என கேள்வி எழுப்பிய அவர்,தீ வைக்கப்பட்ட பிறகு அந்த இடத்தில் மின்விசிறி பொருத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments