தீவிரவாதத்திற்கு தான் பலியாகி விட்டதாக பாகிஸ்தான் பொய் நாடகமாடுகிறது என இந்தியா சாடல்

0 2001
எல்லை தாண்டிய தீவிரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளரான பாகிஸ்தான், தான் தீவிரவாதத்திற்கு பலியாகி விட்டதாக பொய் முகமூடியை போட்டுக்கொண்டு நாடகமாடுகிறது என இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளரான பாகிஸ்தான், தான் தீவிரவாதத்திற்கு பலியாகி விட்டதாக பொய் முகமூடியை போட்டுக்கொண்டு நாடகமாடுகிறது என இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர் அல்லாத பாகிஸ்தான் சார்பில் அதன் ஐநா பிரதிநிதி விதிகளை மீறி அதில் தீவிரவாதம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் பொய்யை ஆயிரம் முறை தொடர்ந்து கூறினாலும் அது உண்மையாகி விடாது என தெரிவித்துள்ளது.எனினும் தீவிரவாத தடுப்பு குறித்து பாகிஸ்தான் கூறி வரும் ஐந்து பெரிய பொய்கள் இந்த அறிக்கை வாயிலாக அம்பலமாகி விட்டதாகவும் இந்தியா கூறியுள்ளது. 

தங்களது நாட்டில் இருந்து அல் கொய்தாவை அழித்து விட்டதாக பாகிஸ்தான் கூறியதை சுட்டிக்காட்டிய இந்தியா, அங்குதான் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றது என்பது பாகிஸ்தான் பிரதிநிதிக்கு தெரியாமல் போய்விட்டதா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments